பானஜி,
1961 ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 19) போர்ச்சுகீசிய ஆட்சியில் இருந்து கோவாவை இந்திய ஆயுதப் படைகள் விடுவித்தனர். இதற்காக ஆபரேஷன் விஜய் என்ற திட்டத்தை இந்திய ஆயுதப்படை மேற்கொண்டது. ஒவ்வொரு வருடமும் அவர்களின் தியாகத்தை இந்த நாளில் நாம் நினைவு கூரும் விதமாக "கோவா விடுதலை தினம் " கொண்டப்படுகிறது.
கோவா மாநிலத்தின் விடுதலை தினத்தை முன்னிட்டு அங்கு இன்று நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்கபல் கோவா சென்றார். அங்கு கோவா விடுதலைக்காக போராடிய தியாகிகளின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு பிளை பாஸ்ட் மற்றும் பாய்மர அணிவகுப்பு நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.