தேசிய செய்திகள்

இந்திய நிலப்பகுதியை பிரதமர் மோடி சீனாவிடம் ஒப்படைத்துவிட்டார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சீன ஆக்கிரமிப்பிற்கு பயந்து இந்திய நிலப்பகுதியை சீனாவிடம் பிரதமர் மோடி ஒப்படைத்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய-சீன எல்லை பகுதியில் நீடிக்கும் பதற்றம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். நேற்று நடந்த இந்த ஆலோசனையின் போது, இந்திய எல்லை பகுதியில் யாரும் ஊடுருவவில்லை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இதனை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சீன ஆக்கிரமிப்பிற்கு பயந்து பிரதமர் மோடி இந்திய நிலப்பகுதியை சீனாவிடம் ஒப்படைத்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இந்தியாவிற்குள் யாரும் ஊடுருவவில்லை என்றால் இந்திய வீரர்கள் எதற்காக கொல்லப்பட்டனர் என்றும்? எங்கு கொல்லப்பட்டனர்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையில் இந்தியா எந்த ஒரு பகுதியையும் சீனாவிடம் விட்டுக்கொடுக்கவில்லை என்றும் பிரதமர் கூறிய கருத்து குறித்து சிலர் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் பிரதமர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்