புதுடெல்லி,
புகழ்பெற்ற டாக்டரும், மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரியுமான பிதன் சந்திர ராயின் நினைவாக ஜூலை 1-ந் தேதி டாக்டர்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பிதன் சந்திர ராய் பிறந்த, மறைந்த தினம் ஜூலை 1 ஆகும்.
டாக்டர்கள் தினத்தையொட்டி டாக்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசுகிறார். அது தொடர்பாக மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கொரோனாவுக்கு எதிரான போரில் அனைத்து டாக்டர்களின் பணியில் இந்தியா பெருமைப்படுகிறது.
ஜூலை 1-ந் தேதி தேசிய டாக்டர்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. நாளை (இன்று) பிற்பகல் 3 மணிக்கு, இந்திய மருத்துவ கழகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் டாக்டர்கள் சமூகத்துடன் நான் பேசுகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.