தேசிய செய்திகள்

கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி-ஹர்சிம்ராத் கவுர் பாதல்

கர்தார்பூர் வழித்தடத்தை வரும் நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என மத்திய மந்திரி ஹர்சிம்ராத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கு இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம்.

அங்கு சென்று வரும் சீக்கியர்கள் விசா இன்றி பயணம் செய்வதற்காக, பாகிஸ்தானின் கர்தார்பூரையும் இந்தியாவில் உள்ள குர்தாஸ்பூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் கர்தார்பூர் வழித்தடத் திட்டம் இந்தியா-பாகிஸ்தான் அரசாங்கங்களால் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

இந்த வழித்தடத்தை வரும் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என மத்திய மந்திரி ஹர்சிம்ராத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், குரு நானக்கின் ஆசீர்வாதத்தோடு சீக்கியர்களின் கனவான தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கான புனித பயணம் நனவாகப் போகிறது.

வரும் நவம்பர் 8 ஆம் தேதி கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி அவர்கள் வரலாறு படைக்க உள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்