தேசிய செய்திகள்

லதா மங்கேஷ்கர் பெயரில் முதல் விருது - பிரதமர் மோடிக்கு இன்று வழங்கப்படுகிறது...!

மும்பையில் இன்று நடைபெறும் விழாவில் லதா மங்கேஷ்கர் விருதை பிரதமர் மோடி பெறுகிறார்.

தினத்தந்தி

லதா மங்கேஷ்கர் விருது

பாரத ரத்னா விருது பெற்ற பழம்பெரும் சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம் 92-வது வயதில் உயிரிழந்தார். இந்தநிலையில் லதா மங்கேஷ்கரின் பெயரில் ஆண்டு தோறும் விருது வழங்கப்படும் என அவரது குடும்பத்தினர் அறிவித்து இருந்தனர்.

நாட்டுக்காகவும், மக்களுக்காகவும், சமூகத்திற்காகவும் அரும் பணியாற்றிய நபருக்கு இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

மோடி பெறுகிறார்

இதில் லதா மங்கேஷ்கர் பெயரில் வழங்கப்படும் முதல் விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படுகிறது. இதற்காக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மும்பை வருகிறார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மும்பையில் நடைபெற உள்ள மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் விழாவில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளார். அவருக்கு விழாவில் விருது வழங்கப்பட உள்ளது. அந்த விருது நாட்டுக்காக கடுமையாக உழைக்கும் தனிநபருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுவதாகும் என்று கூறப்பட்டு உள்ளது.

இதேபோல விருது வழங்கும் விழாவில் பிரபல பாடகர் ரூப் குமார் ரதோட் நடத்தும் 'சுவர்லதாஞ்சலி' நடக்கிறது. இதில் பிரபல பாடகர்கள் ஹரிகரன், ஆர்யா அம்பேக்கர், ரீவா ரதோட், பிரியங்கா பார்வே, மதுரா தாதர், விபாவரி ஆப்தே உள்ளிட்ட பலர் பாட உள்ளனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்