தேசிய செய்திகள்

கா‌‌ஷ்மீரில் அனைவருக்கும் சுகாதார காப்பீடு: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

கா‌‌ஷ்மீரில் அனைவருக்கும் சுகாதார காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஆயுஷ்மான் பாரத் என்ற பெயரிலான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. ஏழை எளியோருக்கு இலவச சிகிச்சை வழங்க இது வழிவகுத்துள்ளது.

இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் காஷ்மீர் மக்கள் அனைவரும் கொண்டு வரப்படுகின்றனர். இதை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியாக நாளை (சனிக்கிழமை) தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷாவும், துணை நிலை கவர்னர் மனோஜ் சின்காவும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த திட்டம், காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வாழும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ சேவைகளை பெற வழிவகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்