தேசிய செய்திகள்

வியட்நாம் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற டோ லாம் பணி சிறக்க நல்வாழ்த்துகள்: பிரதமர் மோடி

இரு நாடுகளுக்கும் இடையிலான காலத்தால் சோதிக்கப்பட்ட நட்புறவு மேலும் மேலும் வலுப்பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

புது டெல்லி,

வியட்நாமின் மிக முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவரான டோ லாம். வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வியட்நாமின் தேசிய சட்டமன்ற கூட்டத்தில், அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக டோ லாமவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தனர்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டோ லாம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். டோ லாம் தலைமையின் கீழ், இரு நாடுகளுக்கும் இடையிலான காலத்தால் சோதிக்கப்பட்ட நட்புறவு மேலும் மேலும் வலுப்பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நமது மக்கள் மற்றும் பிராந்தியத்தின் முன்னேற்றம் செழிப்புக்காக, நமது விரிவான ஒரு நீண்டகால கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்த, நாம் இணைந்து நெருக்கமாக பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்தார்.