கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

தனது உருவத்தை ‘ரங்கோலி’ ஓவியமாக அனுப்பிய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பிரதமர் மோடி கடிதம்

தனது உருவத்தை ‘ரங்கோலி’ ஓவியமாக அனுப்பிய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் வந்தனா (வயது 23). இவர் பிறப்பிலேயே வாய் பேச முடியாத, காது கேளாத பெண் ஆவார். ஒரு பயிற்சி நிலையத்தில் ஓவியம் கற்று வருகிறார். தீபாவளியையொட்டி, அவர் பிரதமர் மோடியின் உருவத்தை ரங்கோலி வகை ஓவியமாக தீட்டி, அதை பிரதமருக்கு அனுப்பி வைத்தார். இந்த ஓவியம், பலரது பாராட்டுகளை பெற்றது. இந்தநிலையில், வந்தனாவை பாராட்டி அவருக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வாழ்க்கையில் முட்டுக்கட்டைகளும், சவால்களும் வரலாம். ஆனால், எதிர்மறையான சூழ்நிலையில் கூட மனம் தளராமல், உறுதியுடன் போராடினால், அதுதான் உண்மையான வெற்றி ஆகும். தங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும். கல்வியிலும், ஓவியத்திலும் புதிய உயரத்தை எட்டுவீர்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு