தேசிய செய்திகள்

டெல்லியில் போராட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடியின் சகோதரர்...!

பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி டெல்லியில் உள்ள நியாய விலைக் கடை வியாபாரிகளுடன் போராட்டம் நடத்தினார்.

புதுடெல்லி,

மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் விமர்சனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், அனைத்திந்திய நியாய விலைக்கடை உரிமையாளர்கள் சார்பில் இன்று தலை நகர் டெல்லியில், அ

அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றுக்கான இழப்பீட்டு தொகை வழங்குவது உட்பட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய நியாய விலை கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில், புதுடில்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், நியாய விலைக்கடை சங்கத்தின் துணை தலைவராகப் பதவி வசிக்கும் பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி கலந்துகொண்டார்.

இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது:-

"அனைத்திந்திய நியாய விலைக்கடை உரிமையாளர்கள் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம், எங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை பட்டியலிட்ட மனுவை சமர்ப்பிக்கும். எங்களுக்கு நிவாரணம் வழங்கவும், எங்களின் நிதி நெருக்கடியை போக்கவும் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், அகில இந்திய நியாய விலைக்கடை வியாபாரிகள் கூட்டமைப்பு தேசிய செயற்குழு கூட்டம் நாளை நடைபெறும் என்றும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.