புதுடெல்லி,
இந்தியாவில் தயாரிக்கப்படும் குழந்தைகள் விளையாட்டுப்பொருட்களான பொம்மைகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், இந்திய பொம்மைகளின் உலகளாவிய சந்தையை அதிகரிக்கும் நோக்கத்தோடும் தன்னிறைவு இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய பொம்மை கண்காட்சி 2021 இன்று தொடங்கப்பட்டது. இன்று முதல் மார்ச் 2-ம் தேதி வரை இக்கண்காட்சி
நடைபெறுகிறது.
இந்நிலையில், இக்கண்காட்சியை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
துவக்க நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 'இந்தியர்களின் வாழ்க்கைமுறையில் அங்கமாக உள்ள மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றை நமது பொம்மைகள் பிரதிபளிக்கின்றன.
பெரும்பாலான இந்திய பொம்மைகள் இயற்கையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு இளைக்காத மூலப்பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. அதற்கு பயன்படுத்தப்படும் நிறங்களும் இயற்கையான மற்றும் பாதுகாப்பானது.