புதுடெல்லி,
பிரதமர் மோடி ஜனவரி 4ந்தேதி வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் மற்றும் திரிபூராவுக்கு செல்கிறார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிரதமர் மோடி ஜனவரி 4ந்தேதி மணிப்பூர் மற்றும் திரிபூரா மாநிலங்களுக்கு செல்கிறார். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ரூ.4800 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும், திரிபூரா மாநிலத்தில் தலைநகர் அகர்தலாவில் மகராஜா பீர் பிக்ரம் விமானநிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டடத்தை திறந்து வைக்கிறார்.
மணிப்பூர் மாநிலத்தில் ரூ.1850 கோடியில் 13 வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அம்மாநிலத்தில் ரூ.2950 கோடியில் 9 வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.