தேசிய செய்திகள்

சிக்கனத்தை கடைபிடியுங்கள் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

ஆடம்பரத்தை தவிர்த்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறுவுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

சில அமைச்சர்களின் ஆடம்பரம் குறித்து கடும் அதிருப்தி அடைந்த பிரதமர் மோடி அமைச்சர்கள் ஆடம்பரத்தை தவிர்க்குமாறு கூறியுள்ளார் இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:

அமைச்சர்கள் 5 நட்சத்திர விடுதிகளில் தங்குவதை தவிர்க்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது அமைச்சகங்களின் உபயோகத்திற்கு உள்ள கார்களை பயன்படுத்துவது போன்ற சலுகைகளை தவிர்க்க வேண்டும். அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டால் அரசு விருந்தினர் மாளிகையில் தங்க வேண்டும்.நட்சத்திர விடுதிகளை தவிர்க்க வேண்டும்.

ஊழலற்ற அரசு என்ற நற்பெயரை காப்பாற்றிக்கொள்ள ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும் என அமைச்சர்களிடம் பிரதமர் மோடி வலிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு