புதுடெல்லி,
பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராயின் 157-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். சமூக சீர்திருத்தவாதியாகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும் இருந்து ஆங்கிலேயர் ஆட்சியின்போது இந்தியா சுதந்திரம் பெற முக்கிய பங்காற்றினார்.
சுதந்திரப் போராட்ட தியாகி லாலா லஜபதி ராயின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, டுவீட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "சுதந்திரப் போராட்டத்தில் அவரது துணிச்சல், போராட்டம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை நாட்டு மக்களால் எப்போதும் நினைவுகூரப்படும் என்று அவர் கூறினார்".