புதுடெல்லி,
அபுதாபி பட்டத்து இளவரசர் முகம்மது பின் ஜாயத் அல் நாயான், தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடியுடன் உரையாடினார். இந்த உரையாடலின் போது இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, ஓ.ஐ.சி. எனப்படும் இஸ்லாமிய ஓத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்க அழைப்பு விடுத்ததற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இரு தரப்பு உறவுகள் மேலும் வலுவடைந்து வருவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.