புதுடெல்லி,
அமெரிக்காவில் சவுராஷ்டிரா பட்டேல் கலாச்சார சமாஜின் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது சவுராஷ்டிரா பட்டேல் கலாச்சார சமாஜின் சர்வதேச மாநாட்டிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். உணவகங்கள் மற்றும் சாலையோர உணவகங்கள் நடத்தி வரும் பட்டேல் சமூகத்தினர் இந்தியாவின் பெருமையை அங்கு உள்ளவர்களிடம் எடுத்துக்கூறி இந்தியா பக்கம் திருப்ப வேண்டும்.
5 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தியா பற்றிய சிறப்புகளை சொல்லும் குறும்படங்களை உணவகங்களில் உள்ள தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும். இந்தியாவின் பெருமையை 5 பேருக்காவது எடுத்து செல்லுங்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.