புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுகிழமையில், மான் கி பாத் என்ற நிகழ்ச்சி வழியே மக்களுடன் உரையாடி வருகிறார்.
அதன்படி, 72வது முறையாக மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்ற உள்ளார். இன்று காலை 11 மணி அளவில் ஒலிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சி இந்த ஆண்டின் கடைசி என்பதால், இந்த ஆண்டின் நிகழ்வுகள் மற்றும் வரவிருக்கும் ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.