தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர்கள் பெற்ற வருமான வரி ‘ரீபண்ட்’ - “தகவல் இல்லை” என்று பிரதமர் அலுவலகம் கைவிரிப்பு

முன்னாள் பிரதமர்கள் பெற்ற வருமான வரி ‘ரீபண்ட்’ தொகை குறித்து கேள்விக்கு, “தகவல் இல்லை” என்று பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர்களும், அவர்களுடைய மந்திரிசபை சகாக்களும் வருமான வரி செலுத்தியதில் இருந்து திரும்பப் பெற்ற தொகை (ரீபண்ட்) குறித்த விவரங்களை அளிக்குமாறு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் விண்ணப்பித்து இருந்தார். ஆனால், அந்த தகவல்கள், பிரதமர் அலுவலகம் பராமரிக்கும் பதிவேடுகளில் இல்லை என்று பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது.

தற்போதைய பிரதமர் மோடி வருமான வரி செலுத்தியதில் இருந்து திரும்பப் பெற்ற தொகை குறித்தும் கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. ஆனால், அது தனிப்பட்ட தகவல் என்பதால், அதை தெரிவிப்பதில் இருந்து தகவல் பெறும் உரிமை சட்டம் விலக்கு அளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது.

இருப்பினும், பிரதமர் மோடி கடந்த 18 ஆண்டுகளில் 5 தடவை ரீபண்ட் பெற்றுள்ளதாக வருமான வரித்துறை இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது