மும்பை,
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தது சமீபத்தில் தெரியவந்தது. இருவரும் இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டனர்.
வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. மோசடி தொடர்பான விசாரணை தொடங்கியதுமே விசாரணைக்கு ஆஜராக சம்மன் விடுக்கப்பட்டது. ஆனால் இருவர் தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே அவரை கைது செய்ய இன்டர்போல் உதவியை இந்திய விசாரணை முகமைகள் நாடியது. வங்கி மோசடி தொடர்பாக விசாரிக்கும் விசாரணை முகமைகள் அவருடைய சொத்துக்களையும் முடக்கி வருகிறது. பணமோசடி தொடர்பாக விசாரித்துவரும் அமலாக்கப்பிரிவு நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.171 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி உள்ளது.