நாக்பூர்,
மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் உள்ள அரசு பள்ளி கூடத்தில் 70வது குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவியர் மேடையில் நடனம் ஆடியபடி இருந்தனர்.
இந்த நிலையில் அங்கிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது கையில் வைத்திருந்த பணத்தினை அவர்கள் மீது வீசியுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.