தேசிய செய்திகள்

புதுச்சேரி சட்டசபைக்குள் நுழைய பாரதீய ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி மறுப்பு

புதுச்சேரி சட்டசபைக்குள் நுழைய பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. #PuducherryAssembly

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.

கடந்த முறை என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது அப்போதைய முதல்- அமைச்சர் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தார். அதுவே தற்போதும் நடை முறையில் இருந்து வருகிறது.

அதன்படி மார்ச் மாத இறுதியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன்பின் சில மாதங்கள் கழித்து முழுபட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது புதுச்சேரியில் வழக்கமாகி விட்டது.

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இன்றைய கூட்டத்தில் கவர்னர் கிரண்பெடி உரையாற்றுகிறார். சட்டசபையில் உரையாற்றுவதற்காக கவர்னர் கிரண்பெடி இன்று காலை சட்டசபைக்கு வருகிறார்.

அதன்பின் அடுத்த 3 மாதங்களுக்கான (ஏப்ரல், மே, ஜூன்) அரசின் செலவினங்களுக்காக முன்அனுமதிகோரி இடைக்கால பட்ஜெட்டை முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்கிறார். அத்துடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன.

இந்த கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோர் இன்று சட்டசபைக்கு வந்தனர். அவர்களுக்கு அனுமதி வழங்க சபாநாயகர் வைத்திலிங்கம் முன்பே மறுப்பு தெரிவித்து விட்டார்.

இதனை தொடர்ந்து 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் சட்டசபைக்குள் நுழைய போலீசார் அனுமதி மறுத்து உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்