தேசிய செய்திகள்

உ.பியில் காவல்துறையினர் குடியிருப்புகளுக்கு காவி வர்ணம் பூசப்பட்டதால் புதிய சர்ச்சை

உத்தர பிரதேசத்தில் காவல்துறையினர் குடியிருப்புகளுக்கு காவி வர்ணம் பூசப்பட்டதால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

தினத்தந்தி

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. யோகி ஆதித்யநாத் அரசு பதவி ஏற்றதும், அம்மாநிலத்தில் உள்ள அரசுக்கட்டிடங்களுக்கு காவி வர்ணம் பூசப்படுவதாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியதையடுத்து, மீண்டும் பழைய நிறமே அரசு கட்டிடங்களுக்கு பூசப்பட்டது.

இந்த நிலையில், அங்குள்ள காவல்துறையினர் குடியிருப்பு ஒன்றுக்கு காவி வர்ணம் பூசப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. காவலர்களின் குடியிருப்பில் உள்ள கட்டிடங்களுக்கு காவி வர்ணம் பூசப்பட்ட புகைப்படங்களை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. உத்தர பிரதேச மாநில அரசின் இந்த செயலுக்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை