தேசிய செய்திகள்

டெல்லியில் 19 மொபைல் எண்கள் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளன - காவல் துறை

மத்திய புலனாய்வு நிறுவனம் கொடுத்தத் தகவலையடுத்து 19 மொபைல் எண்களை டெல்லி காவல்துறை தங்கள் கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி

இந்த எண்கள் போலியான முகவரியை கொடுத்து பெறப்பட்டுள்ளன எனவும், இவை தேச-விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படும் சாத்தியக்கூறு உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாஃபர் அகமது மிர் எனும் நபர் டெல்லியின் ஜாமா மஸ்ஜித் பகுதியில் வசிப்பதாக கூறி கொடுத்த ஆவணத்தில் இருந்த புகைப்படம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வழங்கப்பட்ட வாக்காளர் அட்டையில் ஒட்டப்பட்டிருந்தது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லி மற்றும் ஜம்மு-காஷ்மீர் முகவரிகளும் போலியானவை எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தப் போலி ஆவணத்தைப் பயன்படுத்தி மொபைல் எண் கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. ஆகையால் அனைத்து 19 எண்களும் காவல்துறை கண்காணிப்பின் கொண்டு வரப்பட்டுள்ளன.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை