தேசிய செய்திகள்

பூமிக்கு அடியில் நக்சல்கள் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்

பிரஷர் குக்கர் ஒன்றில் இரண்டு கிலோ வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை வெடிகுண்டு நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.

தினத்தந்தி

கட்சிரோலி,

மராட்டிய மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள கோண்டிரி வனப்பகுதியில் நக்சலைட்கள் வெடிபொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் அப்பகுதியில் தேடுதல் பணியை தொடங்கினர். அப்போது பூமிக்கு அடியில் 2 அடி ஆழத்தில் பிரஷர் குக்கர் ஒன்றில் இரண்டு கிலோ வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை வெடிகுண்டு நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் பாதுகாப்பான முறையில் வெடிகுண்டு நிபுணர்களால் அழிக்கப்பட்டன. மாவட்டத்தில் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை