தேசிய செய்திகள்

ஷரத்தா கொலை வழக்கு: அப்தாப் அழைத்துச் செல்லப்பட்ட வேன் மீது தாக்குதல்

ஷரத்தாவை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அப்தாப் இன்று உண்மை கண்டறியும் சோதனைக்கு அழைத்து வரப்பட்ட போது, அவர் மீது தாக்குதல் முயற்சி நடைபெற்றது.

புதுடெல்லி,

மராட்டிய மாநிலம் வசாயை சேர்ந்த மும்பை கால்சென்டர் ஊழியர் ஷரத்தா கடந்த மே மாதம் அவரது காதலன் அப்தாப் அமீனால் டெல்லியில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். பின்னர் உடலை 35 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசியதாக கூறப்படுகிறது. கொடூரமாக நடைபெற்ற இந்தக் கொலை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஷரத்தாவை கொலை செய்த அவரது காதலர் அப்தாப் பூனவாலாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இதற்காக டெல்லியில் உள்ள ரோஹினி பகுதிக்கு அப்தாப் பூனவாலாவை போலீசார் அழைத்து வந்தனர். பின்னர் சோதனை முடிந்த பிறகு பூனவாலாவை டெல்லி போலீசார் தங்களது வேனில் அழைத்துச்சென்றனர். அப்போது, அப்தாப் அழைத்துச்செல்லப்பட்ட வாகனம் மீது தாக்குதல் நடைபெற்றது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை