தேசிய செய்திகள்

ராம ராஜ்ஜியத்தின் கொள்கை, நவீன இந்தியாவின் அடையாளம் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

ராம ராஜ்ஜியத்தின் கொள்கை, நவீன இந்தியாவின் அடையாளம் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெற்றது. பூமி பூஜை நடைபெறும் இடத்திற்கு மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வருகை தந்தனர். தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க பூமி பூஜை தொடங்கியது. இதையடுத்து, ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், அயோத்தியில் ராம் கோயிலுக்கு அடித்தளம் அமைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். சட்டத்திற்கு இணங்க கட்டமைக்கப்பட்டிருப்பதால், இது இந்தியாவின் சமூக நல்லிணக்க உணர்வையும் மக்களின் வைராக்கியத்தையும் வரையறுக்கிறது. ராமர் கோவில் வளாகம், ராம ராஜ்ஜியத்தின் கொள்கைகளின் அடிப்படையில், நவீன இந்தியாவின் அடையாளமாக மாறும் என்று பதிவிட்டுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்