திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சுஷ்மிதா தேவ், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், உள்ளாட்சி தேர்தலையொட்டி அம்தலி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர்களது பிரசார வாகனம் அப்பகுதி பா.ஜ.க.வினரால் மறிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் எம்.பி. சுஷ்மிதா மற்றும் அவருடன் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் எம்.பி. மற்றும் 2 பிரமுகர்கள் காயம் அடைந்தனர். அவர்களது வாகனமும் சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ் வளர்ச்சியை சகிக்க முடியாமலும், நேர்மையாக தேர்தலை எதிர்கொள்ள முடியாமலும் பா.ஜ.க. இதுபோன்ற காட்டுமிராண்டி தனங்களில் ஈடுபடுகிறது என சுஷ்மிதா எம்.பி. பத்திரிகையாளர்களிடம் கூறினார்.