Image Courtesy: PTI 
தேசிய செய்திகள்

5 மாநிலங்களுக்கு காங்கிரஸ் பார்வையாளர்கள் நியமனம்: சோனியாகாந்தி நடவடிக்கை

சட்டமன்றத்தேர்தலில் தோல்வி எதிரொலியாக, 5 மாநிலங்களுக்கு காங்கிரஸ் பார்வையாளர்களை சோனியாகாந்தி நியமனம் செய்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. இதனையடுத்து கட்சித்தலைவர் சோனியா காந்தி உத்தரவின்படி, அந்த மாநிலத்தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இதற்கிடையே தேர்தல் தோல்விக்கான காரணம் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்து வேட்பாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசிக்க 5 மாநிலங்களுக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் பார்வையாளர்களை சோனியாகாந்தி நியமித்து உள்ளார்.

அதன்படி உத்தரபிரதேசத்திற்கு ஜிதேந்திர சிங், பஞ்சாப்பிற்கு அஜய்மக்கான், மணிப்பூருக்கு ஜெய்ராம் ரமேஷ், உத்தரகாண்டுக்கு அவினேஷ் பாண்டே மற்றும் கோவாவுக்கு ரஜனி படேல் எம்.பி. என 5 மூத்த தலைவர்கள் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை