தேசிய செய்திகள்

பொங்கல் பண்டிகை: ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து

பண்டிகைகள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழுமையை கொண்டு வரட்டும் என தனது வாழ்த்துச்செய்தியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, மக்களுக்கு பொங்கல் மற்றும் சக்கராந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

"நாட்டில் உள்ள அனைவருக்கும் மனமார்ந்த பொங்கல் மற்றும் சக்கராந்தி நல்வாழ்த்துகள். பண்டிகைகள் நமது கலாசார, பாரம்பரிய அடையாளங்களை காட்டுகின்றன. பயிர்களுடன் தொடர்புடைய விழாக்கள் என்பதால், விவசாயிகளுக்கு நன்றி. பண்டிகைகள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழுமையை கொண்டு வரட்டும்."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்