தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை

கேரளாவில் இன்று 6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து தமிழ் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து இருந்தன.

இதுகுறித்து பரிசீலித்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இதுதொடர்பாக கேரள அரசு வௌயிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் உள்ள திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டை, இடுக்கி, வயநாடு பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு தைப்பொங்கல் விடுமுறை 15-ந்தேதிக்கு பதிலாக 14-ந்தேதிக்கு மாற்றப்பட்டு விடுமுறை அளிகப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு தமிழ் அமைப்புகள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்