தேசிய செய்திகள்

பிரபல இந்தி நடிகை ஊர்மிளா காங்கிரசில் இணைந்தார்

பிரபல இந்தி நடிகையான ஊர்மிளா மடோங்கர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

புதுடெல்லி,

பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோங்கர். இவர் காங்கிரஸ் கட்சியில் நேற்று தன்னை இணைத்துக்கொண்டார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அகில இந்திய காங்கிரஸ் ஊடக பிரிவு பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சஞ்சய் நிருபம், மிலின்டா தேரா ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

முன்னதாக அவர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்தது பற்றி நடிகை ஊர்மிளா நிருபர்களிடம் கூறுகையில் காங்கிரஸ் கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் பிடித்ததால் என்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டேன். எனக்கு அன்பான வரவேற்பு கொடுத்த தலைவர் ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் தேர்தலுக்காக கட்சியில் இணையவில்லை. தேர்தல் முடிந்த பின்னரும் கட்சியில் இருந்து விலகமாட்டேன் என்றார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...