தேசிய செய்திகள்

ஆபாச படத்தால் விபரீதம்: 8 வயது சிறுமிக்கு, 5 சிறுவர்களால் நேர்ந்த கொடூரம்

டேராடூனில் 8 வயது சிறுமியை, 5 சிறுவர்கள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த கொடுமையான சம்பவம் நிகழ்ந்துள்ளது. #Dehradun

தினத்தந்தி

டேராடூன்,

9 முதல் 14 வயதுடைய 5 சிறுவர்கள் ஆபாச படம் பார்த்துவிட்டு, 8 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேராடூனின் சஹஸ்பூர் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 சிறுவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சி அடைந்தனர்.

கைது செய்யப்பட்ட சிறுவன் ஒருவன் வாக்குமூலம் அளித்துள்ளான். அதில் சிறுவர்கள் தங்களது மொபைல்போனில் ஆபாச படங்களைப் பார்த்துள்ளனர். பின்னர், சிறுமியை பலாத்காரம் செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே திட்டமிட்டுள்ளனர். அதற்காக அவர்களுக்கு தெரிந்த வீடுகளில் தனியாக இருக்கும் பெண்ணை குறி வைத்துள்ளனர். அதன் பிறகு அந்த சிறுமியை அவர்கள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்நிலையில் அந்த சிறுவர்கள் மீது போக்சோ சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சிறுவர்கள் என்பதால் அவர்கள் சிறார் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்