பனாஜி,
மத்திய மின்சார துறை மந்திரி ஆர்.கே.சிங் கூறியதாவது:-
புதிய மின்கட்டண கொள்கை ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும். இது தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. இது நுகர்வோருக்கு சாதகமாகவும், வெளிப்படையானதாகவும் இருக்கும். மின் நுகர்வோரின் உரிமைகளையும் கூறியுள்ளோம். தரமான சேவைகளையும் வழங்குவதாக இருக்கும். புகார்களுக்கு உரிய நேரத்தில் பதில் அளிக்கவில்லை என்றால் மின் வினியோக நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும். அதேபோல நிறுவனம் சந்திக்கும் இழப்புகளை நுகர்வோர் மீது திணிப்பது தடுக்கப்படும். குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வாங்கும் வகையில் ஒரு திட்டத்தை ஏற்கனவே அமல்படுத்திவிட்டோம். இதன்மூலம் நாடு முழுவதும் நுகர்வோருக்கு ஒரு நாளைக்கு ரூ.3 கோடி மிச்சமாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.