புதுடெல்லி,
கேரளாவில், வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த பாஸ்போர்ட்டுகளை கட்டணம் ஏதுமின்றி மாற்றி கொடுக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளார்.
எனவே, பாஸ்போர்ட் சேதம் அடைந்தவர்கள், சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் சேவை மையங்களை அணுகுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.