தேசிய செய்திகள்

இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு தள்ளிவைப்பு

தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இளநிலை மருத்துவப்படிப்புகளுக்காக கடந்த மே மாதம் 5-ந்தேதி நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது அடுத்தடுத்து வெளிச்சத்துக்கு வருகிறது. இது தொடர்பாக கைது, வழக்கு, விசாரணை என பெரும் சர்ச்சைகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் இளநிலை நீட் தேர்வில் நடந்த குளறுபடிகளால் முதுநிலை நீட் தேர்வை மிகவும் நேர்மையாக நடத்துவது குறித்து சுகாதார அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் நுழைவுத்தேர்வை தள்ளிவைப்பதாக சுகாதார அமைச்சகம் அறிவித்து உள்ளது. தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. 

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி