தேசிய செய்திகள்

நாட்டில் மின்சார பயன்பாடு ஆகஸ்ட் மாதத்தில் 18 சதவீதம் அதிகரிப்பு

நாட்டில் மின்சார பயன்பாடு, ஆகஸ்ட் மாதத்தில் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா பெருந்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், தொழில்துறைகள் மீண்டும் முழு வீச்சில் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளன. பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், நாட்டில் மின்சார பயன்பாடு கடந்த மாதம் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதாவது 129 பில்லியன் யூனிட் மின்சார பயன்பாடு இருந்ததாக மத்திய மின்சாரம் மற்றும் மின் நுகர்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் மின்சார பயன்பாடு 109.21 பில்லியன் யூனிட் ஆக இருந்தது.

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பெருந்தொற்று வைரஸ் பரவல் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஊரடங்கு கால கட்டத்தில் பல்வேறு தொழில்களும் முடங்கியதால், மின்சார பயன்பாடு கணிசமாக குறைந்தது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு