தேசிய செய்திகள்

பிரக்யா சிங் எம்.பி.யை தொடர்ந்து கோட்சேவுக்கு பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. புகழாரம்

பிரக்யா சிங் எம்.பி.யை தொடர்ந்து கோட்சேவுக்கு பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஒருவர் புகழாரம் சூட்டிய வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

இந்தூர்,

மத்தியபிரதேச மாநிலம் போபால் தொகுதி பா.ஜனதா எம்.பி.யும், பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்குர், மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சே ஒரு தேசபக்தர் என்று கூறியதால் சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அவர் மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில், மத்தியபிரதேச மாநிலம் மாவ் தொகுதி பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ.வும், மாநில பா.ஜனதா துணைத்தலைவருமான உஷா தாக்குரிடம் ஒரு செய்தி சேனல் பேட்டி கண்டது. கோட்சேவை தேசியவாதியாக கருதுகிறீர்களா? என்று நிருபர் கேட்டதற்கு, ஆமாம், அவர் தேசியவாதிதான். தனது வாழ்நாள் முழுவதும் அவர் நாட்டைப் பற்றிய அக்கறையுடன் இருந்தார். காந்தியை கொலை செய்ய எந்த சூழ்நிலையில் முடிவு எடுத்தார் என்பது அவருக்குத்தான் தெரியும் என்று உஷா தாக்குர் பதில் அளித்தார்.

இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உஷாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அது வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ என்று பா.ஜனதா பதில் அளித்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை