தேசிய செய்திகள்

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து தமிழ் மொழி நீக்கம், பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டது என்பதை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் மறுத்துள்ளார். #PrakashJavadekar

புதுடெல்லி,

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆரம்ப, உயர்நிலை வகுப்பு ஆசிரியர் பணிக்கு சி.டி.இ.டி. தேர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. 20 மொழிகளில் தேர்வு எழுதும் வசதி இருந்து வந்தது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, குஜராத்தி என 17 மொழிகள் இப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் மொழிகளில்தான் எழுத வேண்டும் என்று தகவல் வெளியாகியது. தமிழக அரசியல் கட்சிகள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இப்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் மறுத்துள்ளார். தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை