Image Courtesy: PTI 
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி முன்னிலையில் கோவா முதல்-மந்திரியாக பிரமோத் சவந்த் இன்று மீண்டும் பதவி ஏற்பு..!!

பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெறும் விழாவில், கோவா முதல்-மந்திரியாக பிரமோத் சவந்த் இன்று மீண்டும் பதவி ஏற்க உள்ளார்.

தினத்தந்தி

பனாஜி,

கோவா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 20 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் கோவா மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

கோவா மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜனதா பெற்ற வெற்றியைத்தொடர்ந்து, புதிய முதல்-மந்திரியாக பிரமோத் சவந்த் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார்.

காலை 11 மணியளவில், பனாஜி அருகே சியாம பிரசாத் முகர்ஜி மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடக்கிறது. பிரதமர் மோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை