தேசிய செய்திகள்

”நமது காலத்தின் சிறந்த அரசியல்வாதி பிரணாப் முகர்ஜி” என பிரதமர் மோடி புகழாரம்

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, நானாஜி தேஷ்முக், பூபென் ஹசாரிகா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

நமது காலத்தின் சிறந்த அரசியல்வாதி பிரணாப் முகர்ஜி. தேசத்திற்காக தன்னலமின்றி அயராது பணியாற்றியுள்ளார். மிகச்சிறந்த அறிவாற்றல் கொண்ட பிரணாப் முகர்ஜி பாரத ரத்னா விருது பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.