தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கடந்த 9-ந்தேதி உடல்நலக்குறைவால் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே டாக்டர்கள் 5 மணி நேரம் ஆபரேஷன் செய்து அதை அகற்றினர். ஆனால் ஆபரேஷனுக்குப் பிறகு பிரணாப்பின் உடல்நிலை மோசமடைந்தது. எனவே வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பிரணாப் முகர்ஜி நினைவிழந்து ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மேலும், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நுரையீரல் தொற்று பிரச்சினை மற்றும் சிறுநீரக செயலிழப்பு இருப்பதால் அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் நிலையாக இருப்பதாகவும் ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை