தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜி மறைவு: அமெரிக்க வெளியுறவுத்துறை இரங்கல்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மூளையில் ஏற்பட்ட இரத்தக் கட்டி பிரச்சினை காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (திங்கள் கிழமை) மாலை உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கிய அதிகாரிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம். இந்திய வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கக்கூடிய தலைவரை இழந்து வாடும் இந்தியாவிற்கு அமெரிக்கா துணை நிற்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு