தேசிய செய்திகள்

சர்வதேச அளவில் சவாலான நிலை உள்ள போதிலும் இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது: ஜனாதிபதி உரை

சர்வதேச அளவில் சவாலான நிலை உள்ள போதிலும் இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

புதுடெல்லி,

நாட்டின் 68 வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி இன்று நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை ஆற்றினார். ஜனாதிபதி உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* அறிவியல், தொழில்நுட்பத்தில் 2ஆவது மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி

*இளைஞர்கள் எதிர்பார்ப்புகளுடனும் நம்பிக்கையுடனும் உள்ளனர்.

*பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் தற்காலிகமாக பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்படலாம்

*உலக அரங்கில் இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது.

சர்வதேச அளவில் சவாலான நிலை உள்ள போதிலும் இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது.

*மகிழ்ச்சியே மனித வாழ்க்கையின் அடிப்படை

*ராணுவ பலத்தில் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது

*நாட்டை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.

*உலக அரங்கில் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பது இந்திய பொருளாதரம் தான்.

*பன்முகத்தன்மையே இந்தியாவின் வலிமை

*ஜனநாயாகத்தில் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள் பொறுப்புகளுடன் கூடியவை

*நமது பாரம்பரியம் எப்போதும் விவாதத்தை ஆதரித்துள்ளது.

*ஜனநாயகம் நம் ஒவ்வொருவருக்கும் உரிமைகளை வழங்கியுள்ளது.

*ஜனநாயகத்தை மேம்படுத்த நுண்ணறிவுடன் கூடிய பார்வை தேவை

*வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களை மேம்படுத்த நடவடிக்கை

*அரசின் முக்கிய திட்டங்கள் பல சமூக நலனை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டவை .இவ்வாறு அவர் பேசினார்.