தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜிக்கு ராசியாக அமைந்த 13-ம் எண்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு 13-ம் எண் ராசியானதாக அமைந்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பொதுவாக, 13-ம் எண், கெட்ட எண்ணாக கருதப்படுகிறது. ஆனால், மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு 13-ம் எண் ராசியானதாக அமைந்துள்ளது. எண் கணிதத்துக்கே சவால் விடும் இந்த தகவலை பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி தெரிவித்தார்.

பிரணாப் முகர்ஜி, முதன் முதலில் 1969-ம் ஆண்டு ஜூலை 13-ந் தேதி, மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றார். டெல்லியில் தல்கடோரா சாலையில் 13-ம் எண் முகவரி கொண்ட வீட்டில்தான் அவர் 10 ஆண்டுகள் குடியிருந்தார். அப்போதுதான், அவரது அரசியல் வாழ்க்கை உச்சத்தை தொட்டது.

பிரணாப் முகர்ஜியின் திருமண தேதி ஜூலை 13 ஆகும். அவர் நாட்டின் 13-வது ஜனாதிபதி ஆவார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை