தேசிய செய்திகள்

பீகார் தேர்தலில் போட்டியிடுவேன்; பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

வேட்பாளர் பட்டியலில் என்னுடைய பெயரும் இடம்பெறும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

தினத்தந்தி

பாட்னா,

பீகார் சட்டசபைக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 6 மற்றும் 11-ந் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறியுள்ள பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் களம் காண்கிறது. இதுதொடர்பாக நேற்று பிரசாந்த் கிஷோர் நிருபர்களிடம் கூறுகையில், ஜன் சுராஜ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வருகிற 9-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று அறிவிக்கப்படுவார்கள்.

வேட்பாளர் பட்டியலில் என்னுடைய பெயரும் இடம்பெறும். வேட்பாளர் பட்டியல் ஆச்சரியம் நிறைந்ததாக இருக்கும் என்று கூறினார்.இருப்பினும் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை பிரசாந்த் கிஷோர் தெரிவிக்கவில்லை. அதற்கு 9-ந் தேதி வெளியிடப்படும் வேட்பாளர் பட்டியலில் பதில் கிடைக்கும்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்