தேசிய செய்திகள்

பீகார் தேர்தலுக்கு பிறகு நிதிஷ்குமார் அணி மாறுவார்-பிரசாந்த் கிஷோர் கணிப்பு

நிதிஷ்குமார் மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

தினத்தந்தி

பாட்னா,

பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், உடல் அளவில் களைத்துப்போய் விட்டார். மனதளவில் ஓய்வு பெற்று விட்டார். அவரது மந்திரிகளின் பெயர்களைக் கூட அவரால் சொந்தமாக சொல்ல முடியாது.

நிதிஷ்குமார் மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது. அதனால் அவரை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க பா.ஜனதா தயங்குகிறது. அவரை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க முடியுமா என்று பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும் சவால் விடுக்கிறேன். இந்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவார். ஆனால், தேர்தலுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை எதிர்பார்த்து அணி மாறிவிடுவார்" இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து