தேசிய செய்திகள்

காணாமல் போன விஸ்வ இந்து பரிஷத் தலைவர் தொகாடியா சுயநினைவற்ற நிலையில் மீட்பு

குஜராத்தில் காணாமல் போன விஸ்வ இந்து பரிஷத் தலைவர் தொகாடியா சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு உள்ளார்.#PravinTogadia

தினத்தந்தி

அகமதாபாத்,

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவரான பிரவீன் தொகாடியா கடந்த 2015ம் ஆண்டில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசினார் என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ராஜஸ்தான் போலீசார் நேற்று காலை அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் தொகாடியா வீட்டில் இல்லை. இதனால் போலீசார் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் அந்த அமைப்பின் தொண்டர்கள் சோலா காவல் நிலையத்தினை முற்றுகையிட்டனர். அவர்கள் போலீசார் தொகாடியாவை கைது செய்துள்ளனர் என கோஷங்கள் எழுப்பியதுடன் சர்கேஜ்-காந்திநகர் நெடுஞ்சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர். போலீசார் உடனடியாக அவரை கண்டறிய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இதனால் காணாமல் போன தொகாடியாவை தேடுவதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தொகாடியாவை போலீசார் கைது செய்யவில்லை என ராஜஸ்தான் காவல் துறையின் மூத்த அதிகாரி கூறியுள்ளார். நேற்று காலை 11 மணியளவில் ஆட்டோ ஒன்றில் கிளம்பி சென்றபின் அவரை காணவில்லை என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சந்திரமணி மருத்துவமனையின் மருத்துவர்கள் கூறும்பொழுது, கிழக்கு அகமதாபாத் நகரில் கோடார்பூர் பகுதி அருகே பூங்கா ஒன்றில் தொகாடியா மயக்கமடைந்த நிலையில் கிடைந்துள்ளார். அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். குறைந்த சர்க்கரை அளவால் தொகாடியா சுயநினைவற்ற நிலையில் கீழே விழுந்துள்ளார். அவரது உடல் நிலை முழுவதும் சீரான பின் மருத்துவமனையில் இருந்து திரும்புவார் என தெரிவித்துள்ளனர்.

#PravinTogadia | #Ahmedabad

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது