தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை - மந்திரி ராஜேஷ் தோபே தகவல்

மராட்டியத்தில் 3-வது கொரோனா அலையை எதிர்கொள்ள குழந்தைகள் மருத்துவ நிபுணர்கள் பணிக்குழு அமைக்கப்படும் என மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

3-வது கொரோனா அலை அபாயம் இருப்பதால் அதை எதிர்கொள்ள குழந்தைகள் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய பணிகுழு அமைக்கப்பட உள்ளதாக மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.

மராட்டியத்தில் 2-வது கொரோனா அலை கடந்த மாதம் உச்சத்தில் இருந்தது. தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. இந்தநிலையில் 3-வது கொரோனா அலைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அது குழந்தைகளை அதிகளவில் தாக்கும் எனவும் வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்தநிலையில் 3-வது அலையை எதிர்கொள்ள வசதியாக குழந்தைகள் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய பணிக்குழு அமைக்கப்படும் என சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 3-வது அலையை எதிர்கொள்ள வசதியாகவும், முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் நிபுணர்கள் குழுவை அமைக்க முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சுகாதார துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து 13 நிபுணர்கள் அடங்கிய குழந்தைகள் நல பணிக்குழு அமைக்கப்படுகிறது. குழந்தைகள் நல மருத்துவர் சுகாஸ் பிரபு இந்த குழுவின் தலைவராக இருப்பார். மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரக இயக்குனர் தத்யாராவ் லகானே உறுப்பினர் செயலாளராக இருப்பார் என்றார்.

மேலும் இதுகுறித்த உத்தரவையும் நேற்று அரசு வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது