தேசிய செய்திகள்

கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை

கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு: விஜயாப்புரா மாவட்டம் பபலேஸ்வரா தாலுகா நிடோனி கிராமத்தை சேர்ந்தவர் சந்தீப். இவரது மனைவி ரூபா (வயது 19). இந்த நிலையில் ரூபா 3 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். கடந்த சில தினங்களாக சந்தீப், ரூபா இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் மனம் உடைந்து காணப்பட்ட ரூபா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் ரூபா தற்கொலை செய்யவில்லை என்றும், சந்தீப் தான் ரூபாவை கொலை செய்து உடலை தூக்கில் தொங்கவிட்டதாக ரூபாவின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இதனால் சந்தீப்பை பிடித்து பபலேஸ்வரா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...