தேசிய செய்திகள்

ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி - உதவிய ரெயில்வே போலீசாருக்கு கணவர் நன்றி

நெருல் ரெயில் நிலையத்தில் இருந்த 3 பெண் ரெயில்வே போலீசார் அவரை மீட்டு நெருவில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர்.

தினத்தந்தி

தானே,

நவி மும்பையில் உள்ள ஊரான் பகுதியை சேர்ந்தவர் கர்ப்பிணியான சக்கிய மெகபூப் சையத் (வயது 25). இவர் நேற்று காலை 8.30 மணியளவில் சொந்த வேலைக்காரணமாக உள்ளூர் ரெயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ரெயில் நெருல் நிலையத்தை அடைந்தபோது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது நெருல் ரெயில் நிலையத்தில்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  3 பெண் ரெயில்வே போலீசார் அவரை பாதுகாப்பாக மீட்டு நெருவில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர்.

அந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. மேலும் தாயும் சேயும் நலமாக இருப்பதாக ரெயில்வே மூத்த ஆய்வாளர் சாம்பாஜி கட்டாரே தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் உடனடியாக உதவிய ரெயில்வே  பெண் போலீசாருக்கு சக்கியாவின் கணவர் நன்றி தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து