தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்: வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயாராகும் காங்கிரஸ்

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ஆம் தேதி நிறைவுபெற்றது.

நாளை(ஜூன் 4) அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை பணி நடைபெறவுள்ளது.இந்த நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி ஆட்சி அமைப்போம் என்று 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உறுதியாக கூறி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து